மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில்
ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ,
அதை எனக்கே செய்தீர்கள் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 25 : 40
ஊரடங்கில் உள்ளே இருக்கும் நமக்கு
அறைக்கதவுகள் கூட சிறைக்கதவுகளாக தெரிகின்றன.
சொகுசில் சோம்பலாக ஒருபுறம் நாம் இருக்க,
பட்டினிச்சாவு இந்தியாவில் ஆரம்பித்துவிட்டது.
நம்மால் இயன்றதை செய்வோம்.
தேவையுள்ளோர் ஏராளமாக இருக்க,
தாராளமாக உதவிசெய்வோம்.
பிச்சைக்காரர்களையும் சாலையோரங்களில்
அலைபவர்களையும் நினைத்துக்கொள்வோம்.
அவர்களுக்கு செய்யும் இரைப்பணியும் இறைப்பணியே.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே !
ReplyDeleteஇரைப்பணியில் இன்புற்று
ReplyDeleteஇறைப்பணியில் இணைவோமாக.....