நெஞ்சார்ந்த நேசம்.



உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்,
 உன் முழு ஆத்துமாவோடும்,   உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. 
மத்தேயு 22 : 37.

படைத்தவர் நம் மீது பாசம் வைத்ததாலே 
நம்மை தேடி வந்து நம்மேல் அன்பு கூர்ந்தார். 
நாம் அவர் மேல் அன்பு கூறுவது கைம்மாறு அல்ல; 
அவரை கண்டுகொள்ளும் வழி. 
வாழ்வாகிய அவரை கண்டடையும் வழி, 
அவர்மேல் அன்பு வைப்பதே.

அரைகுறையாக அல்ல, முழுமையாக அன்பு செலுத்தவேண்டும்.
"முழுமையாக" என்பதை மனதிலே முக்கியப்படுத்துவோம்.
இருதயத்திலும், ஆத்துமாவிலும், மனதிலும் 
ஆண்டவர்மீது நெஞ்சார்ந்த நேசம் வைப்போம். 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED