முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24:13
நம்மை சுற்றி நடப்பவைகள் நமக்கு நடுக்கத்தை கொடுக்கலாம்,
நிம்மதியில்லாமல் தலை நெருக்கப்படலாம்,
அன்பானவர்களின் அன்பு கூட அறுந்துபோகலாம். .
ஆனாலும் இறைவனை விடாது
உறுதியாய் பற்றிக்கொள்பவனை அவர் இரட்சிப்பார்.
பட்டுக்குஞ்சங்களை கட்டி தழுவதல்ல நமது வாழ்க்கை.
நமக்கு உபத்திரவங்களோ இடறல்களோ வரலாம்,
சோர்வுகள் பரிதாபமாக்கி பந்தாடலாம்!
ஆனாலும், இறுதிவரை உறுதியாய் நிற்பவனுக்கு
இறைவனால் கிரீடம் கிடைக்கும்.
ஆமென். வாழும் காலத்திலே பாடுச் சிலுவை வரும் காலத்திலே பரவசச் சலுகை!
ReplyDelete