நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்;
ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
மத்தேயு 24 : 44
படைத்த இறைவன் பரிபூரணமாக நம்மை நேசிக்கிறார்.
அவரருளும் நிலையான நித்திய வாழ்விற்கு அவரோடு
அணைத்துக்கொள்ள ஆவலாக உள்ளார்.
நினையாத நேரத்தில் வருவார் - வருகைக்கு ஆயத்தப்படுவோம்.
நிலையில்லா இவ்வுலகில் அடுத்த நொடி நமது கையில் இல்லை.
நமது மரணமும் நமக்கு தெரியாது,
அவரது இரண்டாம் வருகையும் நமக்கு தெரியாது.
ஆனால் இரண்டும் உறுதி!
இரட்சகராக வந்தவர் நீதியரசராக வருவார் - ஆயத்தப்படுவோம்.
Amen
ReplyDeleteஆமென்
ReplyDelete