நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு
விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்;
ஆவி உற்சாகமுள்ளதுதான்,
மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
மத்தேயு 26 : 41
நாம் தனித்து வீட்டிலிருக்கும் போது,
சோதனையால் தாக்கப்படாதபடி
விழித்திருந்து வேண்டுதல் செய்வோம்.
உற்சாகம் கொடுக்கும் தூய ஆவியானவர் சோதனைகளை
வெற்றிகொள்ள உந்துவிசையாக இருப்பார்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில சமயங்களில்
தவிர்க்கமுடியாமல் தவறிவிடுகிறோம்.
அதை முற்றிலுமாக தவிர்க்க இறைவனிடம் மன்றாடுவோம்.
ஆலயக் கதவுகள் அடைக்கப்பட்டால் என்ன?
இதயக்கதவுகள் திறக்கப்படட்டும்.
மாம்ச பலவீனத்தால் இச்சைகளுக்குள் சிக்காமல் இருக்க வேண்டுவோம்..
ReplyDeleteவாசற்படியில் நின்று தட்டுகிற இறைவனுக்கு
ReplyDeleteஇதயக் கதவை திறந்தளிப்போம்
வாடிப்போய் வெறிச்சோடிருக்கும் இதயத்திற்கு
இதமாய் இறைவன் மருந்தளிப்பார்