கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்.
மாற்கு 1 : 3
இறைவன் நம்மிடத்தில் வந்து தங்குவதற்கு,
நாம் நம்மை தூர்வாரி துப்புரவுபடுத்துவோம்.
அவர் நம்மில் வந்து தங்குவதற்கும் நம்மை தாங்குவதற்கும்,
நாம் அவருக்கு வழியை சீர்ப்படுத்துவோம், செப்பனிடுவோம்.
அவர் நம்மில் வந்தால் நலம் வார்க்கும்
நன்னிலமாக நம்மை மாற்றுவார்.
எனவே, தூய்மையை நோக்கி நமது பாதை போகட்டும்,
தூயவர் வந்து நம்மை ஆளட்டும்.
நம்முடைய வழிகளும், பாதைகளும் பண்படட்டும்.
நம்மை நாம் சீர்தூக்கி பார்ப்போம் - சீர்படுத்துவோம். ஆமென்!
ReplyDeleteதடம் தயாராகட்டும்..
ReplyDeleteதடைகள் தகர்க்கப்படட்டும்..
தங்கு தடையின்றி
தம்மை தயார்படுத்துவோம்..
தூயாவியானவரின் துணை நாடி
ReplyDeleteதூர்வாரி துப்புரவாவோம்!
சீர்தூக்கிப் பார்த்து சீர்படுவோம் - இறை
ஆசீர்வாதங்களை பெற்றிடுவோம்!!
ஆமென்!!!