அவசியமான சுவாசம்

உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,
நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, 
சுகமாயிரு என்றார். 
மாற்கு 5 : 34

நமது வாழ்வு இறைவனில் நல்வாழ்வாக அமைய 
அவர் மீது நாம் வைத்துள்ள விசுவாசம் 
நம் சுவாசம் போலாகவேண்டும்.
அது கடுகளவு இருந்தாலும் அதை அவர் கனப்படுத்துவார். 
நம் கவலை நீங்க நம்மை களிப்பாக்குவார்.

தேவைகள் பலவாகினும் தேவன் ஒருவரே. 
விசுவாசம் விதை போல் இருந்தாலும் 
அதில் விருட்சத்தை கொடுக்கிறார்.
சங்கடம் நீக்கி சமாதானம் தருகிறார், 
வேண்டியோர் வேதனை நீக்குகிறார், 
நமக்கு சுகமும் கொடுக்கிறார்.

Comments

  1. ஆமென்!


    காற்றை சுவாசித்தல் இம்மைக்கு நல்லது!
    கடவுளை விசுவாசித்தல் மறுமைக்கு நல்லது!!

    கடுகளவு விசுவாசம் போதுமாம் அது ஆலமரமாகுமாம்!
    கடவுள் மட்டும் போதுமாம் நம் வாழ்வு வளமாகுமாம்!!

    குழப்பங்கள் தீருமாம், குதூகலம் பிறக்குமாம்!
    குமாரன் விடுதலையாக்கினால் குற்றமனைத்தும் பறக்குமமாம்!!


    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
  2. Amen. Praise the Lord.

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED