பரம பதமா? பரமன் பாதமா?

அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச்
செத்தவன்போலக் கிடந்தான்.
 இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், 
உடனே அவன் எழுந்திருந்தான். 
மாற்கு 9 : 27-28.

மற்றவர்கள்  நம்மை பற்றி மட்டமாய் பேசலாம், 
வேண்டாம் என்று வெட்டி எறியலாம். 
ஆனால் நமது நோக்கமும், ஏக்கமும் நம்மை தேற்றும் 
இயேசு ஒருவர் மீதே இருப்பின், 
வெட்டப்படினும் நம்மை அவரோடு ஒட்டிக்கொள்வார்.

பரமபதம் போன்று விழுவதும் எழுவதுமே வாழ்க்கை. 
ஆனால், சில சமயங்களில் வீழ்ந்த பின், 
எழுவதற்கு வழியின்றி ஏங்கி தவிக்கிறோம். 
எந்நிலையிலும் நம்மை தூக்கிவிடும் 
இயேசுவையே நாடுவோம், எழுந்திடுவோம்.

Comments

  1. ஆமென்!

    எந்த நிலையில் நானிருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் தேவனும் அவரே ............

    என்ற அருமையான கிறிஸ்தவ கீதம் என் நினைவிற்கு வருகிறது.

    இறையாசீர் கிட்டட்டும்!!!

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED