அவர்களெல்லாரும் தங்கள்
பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்;
இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு
உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
மாற்கு 12 : 44
கத்தை நோட்டுகளுள் ஒத்தை நோட்டை போடுவது
ஒரு புறம் இருக்க,
அடுத்த வேலை சாப்பாட்டுக்கான அரிசி துட்டை (காசு)
அள்ளிப்போட்ட ஒரு ஏழை விதவையே
அதிகமாக கொடுத்தார் என்றார் இறை மகன்.
நமக்கும் வறுமை தான். ஆனாலும் இறைப்பணியாளர்களை,
தேவையிலிருப்போரை நினைத்துக்கொள்வோம்.
நமது கொடுக்கும் மனநிலையை
இறைவன் கண்ணோக்குகிறார் - கனப்படுத்துவார்.
Amen
ReplyDeleteமற்றவருக்கு கொடுக்கும் மனநிலையை கொடும் இறைவா! ஆமென்.
ReplyDeleteGuide us Lord. Amen
ReplyDeleteகொடுக்கிற எண்ணம் ஆட்கொள்ளவும், கெடுக்கிற எண்ணம் அடியோடு மறையவும் அருள்புரியும் ஆண்டவா.. ��
ReplyDeleteAmen
ReplyDeleteஆமென் !
ReplyDeleteபரிபூரணத்திலிருந்து கொஞ்சம் கொடுத்தவர்கள் ஒருபுறம் - தன்
பசிபோக்க வைத்திருந்த கொஞ்சத்தையும் முழுமையாய் கொடுத்தவள் மறுபுறம்
உள்ளத்தையெல்லாம் கொடுத்தாள் இவள் உயர்ந்தவள்! - குமிந்துகிடப்பதில்
உலுக்கி கொஞ்சம் கொடுப்பது உயர்ச் செயலோ?
சிரத்தையுடன் சிந்திப்பீர் மானுடரே - இறைவனுக்கு
சிறந்ததையே கொடுத்து சிறப்பெய்துவீரே!!
இறையாசீர் கிட்டட்டும்!!