அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும்
இருதய கடினத்தைக்குறித்தும்,
அவர்களைக் கடிந்துகொண்டார்.
மாற்கு 16 : 14.
இறைவனால் நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்,
இறைவன் நடத்துவார் என்ற விசுவாசம் வேண்டும்.
இதில் நாம் குறைவுள்ளவராய் இருந்தால்
உயிர்த்த இயேசு எதிரே வந்தாலும்
நம்பாமல் தான் நடந்து செல்வோம்.
நாம் நமது நம்பிக்கையில் சறுக்குவது இயல்பு,
அதை சவமாக்குவது தவறு.
இறைவனோடு அனுதினமும் நடக்க
நம் இருதயம் இலகுவாகும், விசுவாசம் விருட்சமாகும்.
அவரை விசுவாசிப்போம், அவர் இருதயத்தை களிப்பாக்குவோம்.
ஆமென்!
ReplyDeleteநம் விசுவாசத்தில், சறுக்குவது இயல்பு, ஆனால் சவமாகக்கூடாது;
நம் தோல்விகளில், மலைப்பது இயல்பு, ஆனால் மரித்துவிடக்கூடாது;
நம் போராட்டத்தில், இளைப்பது இயல்பு, ஆனால் இறந்துவிடக்கூடாது;
நம் வளர்த்தியில், செதுக்கள்களிருப்பது இயல்பு, ஆனால் செத்துவிடக்கூடாது; - மீட்பினை நோக்கிய
நம் ஓட்டங்களில், மலைகளிருப்பது இயல்பு ஆனால் மாண்டுவிடக்கூடாது.
இறுதி வரை நிலை நிற்பவனே மீட்கப்படுவான் என்பதை மனதிற்கொண்டு
உறுதியாக நிற்போம் இப்பூவுலக வாழ்வில்;
மறுவுலக வாழ்வில் மகிழ்ந்திருப்போம்.
இறையாசீர் கிட்டட்டும்!!
Praise the Lord brother. Amen.
ReplyDelete