அன்பின் சலனம்


பாருலகம் பாழ்பட்டு கிடக்க 
பரிகாரம் பத்தாது பரிகாரியே வேணும்னு 
படைத்தவர் பார்த்துக்கொண்டிருக்க 
நான் போகிறேன் என்றார் - இந்த 
பார்த்தலத்தின்  சொந்தக்காரர் இயேசு !
வச்சிருந்த ஒத்தப்பிள்ளையையும் 
உலகத்துக்கு தத்துக்கொடுத்தாரே!
நம்மை தேடி வந்த திருக்குமாரன் 
மாட்டடை தொழுவத்திலே பிறந்தாரே!
தகப்பன் கிட்ட சீமானாய்` வளர்ந்த பிள்ளை
நம் பாவம் தீர்க்க சிலுவை மரம் சுமந்தாரே!
விழிநீர் பொழிந்த மக்களுக்கு
செந்நீர்  பொழிந்து சென்றாரே.
உடம்பெல்லாம் உழப்பட்டு ;
ஆணிகளால் கடாவப்பட்டு
கொல்கதா மலையிலே - கோரசிலுவையிலே
உள்ளம் வெந்து- மெய் நொந்து
துயருற்று துடிதுடித்து உயிர் விட்டார்.  
மரணத்தின் சங்கிலிகளால் கட்டபட்ட அவர் 
அதை முறித்து-தெறித்து மூன்றாம் நாளிலே 
மரணத்தை வெற்றிகொண்டார்.
மரித்தார்-உயிர்த்தார்-உயிர்த்த உன்னதர் பரமேறினார்.

தந்தையின் செல்லகுமாரன் தந்தையிடமே
திரும்பினார்- திரும்பவருவார். 
அவர்தம் அன்பின் வெளிப்பாடே இச்சிலுவை தியாகம்.
அவர்தம் அன்பை அனைவருக்கும் அளிப்போம்! 
வாழும் நாளெல்லாம், வாழ்வதற்கு 
வழித்தடம் காட்டிச்சென்ற வாழ்வளிக்கும் வள்ளலை 
பின்பற்றி வாழ்ந்து சிறப்போம் ;
அவர் இப்பூமிக்கு திரும்ப வரும்பொழுது 
அவருடன் சேர்ந்துக்கொள்ள ஆயத்தப்படுவோம்!!


Comments

  1. பாழடைந்த பாரினிலே...
    பாவிகளாகிய பாமர மக்களிலே....
    படைத்தவர் பார்க்கையிலே...
    உங்கள் படைப்புகளை பட்டியலிட பாமரனின் பாராட்டுக்கள்.....


    ReplyDelete
  2. அன்பை வளர்ப்போம்.

    ReplyDelete
  3. Congratulations Jesse.....😍 May God bless you😊

    ReplyDelete
  4. தம்பி அருமை

    ReplyDelete
  5. Congratulations Thambi. Happy Easter. God bless.

    வலை தளம் ஒன்று வண்ணமயமாய் தோன்றிட
    காரணமான இறைவா உமக்கு நன்றி என்றென்றும்!
    கலை யற்றிருப்போர் முகங்கள் பொலிவு பெற்றிட
    தோரணமா யிருக்கட்டும் இதிலுள்ள பதிவுகள் என்றும்!!

    உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் எல்லாம்
    நல்லெழுத்துக்களாகி பதிவேற்றம் பெறட்டும்! - இதய
    இல்லத்தில் மேலெழும் கருத்துக்கள் எல்லாம்
    நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாகாட்டும்!!

    படிக்கட்டும் பலர் பரமனின் மெய் வார்த்தைகளை
    குறை நீங்க நிறைபெறட்டும் தாழ்வில்!
    இடிக்கட்டும் இதயத்திலிருக்கும் பாவ கோட்டைகளை
    இறையாசீர் பெற்று இன்புறட்டும் வாழ்வில்!!

    ReplyDelete
    Replies
    1. Very Nice Excellent
      Very good creative teacher

      Delete
  6. Nice and True lines... God bless you

    ReplyDelete
  7. Very nice excellent very good creative teacher

    ReplyDelete
  8. Amazing and Awesome. Lines are filled with creativity and Fluency. God Bless You

    ReplyDelete
  9. Wonderful lines. Real lines in simple form

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED