பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும்,
சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்,
கோணலானவைகள் செவ்வையாகும்,
கரடானவைகள் சமமாகும்.
லூக்கா 3 : 4.
வாழ்வு கொடுத்த இறைவன் நமக்கு வாக்கு கொடுக்கிறார்.
வாக்குதத்தத்தை விசுவாசிப்போம்.
அனுவளவு வைரஸ் உலகத்தை உலுக்கும் என்றால்,
நமது கடுகு விதையளவு விசுவாசம்
சகலத்தையும் செம்மையாக்கும்!
உயரத்தை எட்டிய கடன் துயரத்தை ஈட்டலாம்,
உழைப்பாளர் தினத்திலும் உள்ளிருப்பு வெறுப்பைக் கூட்டலாம்.
குன்றும் குழியுமான நம் வாழ்க்கை பயணத்தில்
இந்த புதிய மாதம் ஒரு பூங்காவனமாகும்!!
Amen
ReplyDeleteஅப்படியே ஆகட்டும் இறைவா!
ReplyDeleteஆமென்!
ReplyDeleteவாக்களித்த இறைவனை விசுவாசிப்போம்
வைரஸை இருப்பிடம் தெரியாமல் அழிப்போம்
இன்று அனைத்துலக உழைப்பாளர் தினம்
நன்று என பூரிக்கட்டும் நம் மனம்
கொரோனாவால் புதர் மண்டி கிடக்கும் நம் வாழ்கை
கிறிஸ்துவால் பூங்காவனமாகும் என்பது நம்பிக்கை
இறையாசீர் கிட்டட்டும்!!