வைரஸ் கடலில் - தைரிய பயணம்

(கொரோனா உள்ளிருப்பால் ஒரு மாதகாலம் திருச்சியிலே சிக்கித் தவித்தப் பின்பு, 'இனிமேல் இருப்புக்கொள்ளாது' என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சொந்தங்கள் நிறைந்த சொர்க்கம் போன்ற தாயூருக்கு பயணிக்க எடுத்த முயற்சியின் அனுபவச் சாட்சியே இங்கு கவி வரிகளாக வடிக்கப்பட்டுள்ளது.)

படியுங்கள்! பரமனைப் போற்றுங்கள்!!



கொரோனா அதிகரிக்க - ஊரடங்கு நீட்டிக்க
ஆகா ஓஹோ என்று ஆரம்பத்தில் சாப்பிட்ட எங்களுக்கு
அடுத்த வேளை சோத்துக்கே சோதனை வர
மனது மந்தம் ஆனது, சோர்வு காந்தம் ஆனது
அதிரடி முடிவாக சொந்த ஊருக்கு போவதாய் தீர்மானித்தோம்.

அதிகாலை அழைப்பு அண்ணன் சஞ்சீவிக்கு
அருமையான யோசனை ஒன்று கொடுங்கள் அண்ணா - 
பயணம் அவசியம்,
அதில் சிரமம் வந்தால் உதவிடுங்கள் என்றேன்.
பிச்சையின் பிள்ளையாகிய எனக்கு, அண்ணனின் நண்பராம்
பிச்சைப்பிள்ளை என்பவரே ஆலோசனை  நல்கினார்.
"அடுத்த மாவட்ட பயணத்திற்கு அனுமதிச் சீட்டு அத்தியாவசியம்!
ஆட்சியர் அலுவலகம் செல்லுங்கள், 
உண்மை நிலையை சொல்லுங்கள்" என்றார்;
அகமகிழ்ந்து ஆட்சியரை பார்க்க விரைந்து சென்றோம், - சுவற்றில்
அடிக்கப்பட்ட பந்தைப் போல விரட்டியடிக்கப்பட்டு 
முகம்கவிழ்ந்து நின்றோம்.

சம்பவத்தை சஞ்சீவி அண்ணன்கிட்ட சொல்ல
"கடவுள் நினைச்சா எப்படியும் போவப்பா
அவரு முடிவு பண்ணிட்டா யாராலயும் தடுக்க முடியாது." (யோபு 42:2)
சொல்லிட்டு, சோத்துக்கு பணம் தரேன்னு முடிச்சிட்டார்.

ESCAPE ஆக வழியில்லாம 
புலவர் SF கிட்ட புலம்ப
உற்சாகப்படுத்திய அவர் 
"சாமியால் சகலமும் சாத்தியம்" என்றார். (மாற்கு 10:27)
அத்தியாவசியத்திற்கு ஆயிரம் தர முன்வந்தார்.

அவரைப் போலவே, சங்கடத்தில் உதவ சக்கரா அண்ணனும்
அன்புடன் பார்த்துக்கொள்ள பாசமிகு 
அநேகரும் இருந்தபொழுதிலும்
'அற்புதம் ஒன்று நடந்து விடாதா, எங்கள் பயணம்
அரைமணிப் பொழுதில் தொடங்கிவிடாதா' என ஏங்கிநின்றோம்.

கலாய்த்ததில் கடுப்பாகியே பழக்கப்பட்டவன்  
கல்லூரி நண்பன் ஆல்பர்ட், கைரேகை  உதவி ஆய்வாளர். 
காவல்துறையின் காலடி திடீரென என் அறையில் பட
"கவலைப்படாதடா, கடவுள் இன்னைக்கு நீ 
ஊருக்கு போகணும்ன்னு எழுதியிருந்தா அவசியம் போவ" (பிர. 3:11).
உதவி கேட்டு விரைந்தோம், நண்பனின் ஊக்கத்தால்
உதவி ஆணையர் அலுவலகத்திற்கு.
வீணானது முயற்சி, அடுத்தபடிக்கு பெயர்ச்சி;

"பொறு ஒரு வாரம், போகலாம் ஊர் ஓரம்" என்றான் நண்பன்.
என்னடா இவனா நமக்கு உதவுறான்? (மாற்கு 12:10)
'ஊருக்கு போக வழியே இல்லையா?
மனதும், மகிழ்ச்சியும்; தண்ணீரும் தாமரையுமானது.
வழியே இல்லையா, சரி பழகுவோம்'  (பிலி. 4:11-12).
சமைத்தோம் - சாப்பிட்டோம் – சரிந்திட்டோம்.

"என்னடா இது சோழநாட்டுக்கு வந்த சோதனை,
சொந்த ஊருக்கு போக இம்புட்டு பாடா?
பத்து நிமிஷம் நடந்து போய்
பஸ் ஏறினா பஞ்சா பறந்து போயிரலாம்,
திரும்புன பக்கமெல்லாம் முட்டுதே,
கடவுளே! கருணை காட்டுங்க. (சங். 61:1-2)

அழைப்பு வந்தது மச்சான் ராசா பாவாணரிடமிருந்து 
"ஊருக்கு போறோம், இப்ப தான் காஞ்சியிலே கிளம்புறோம்,
ஏறிக்கோ ரோட்டுல, இறக்கி விட்டிடுறோம் வீட்டுல.
பத்து மணி வாக்குல; திருச்சி வந்துருவோம் CAR-ல;
புற வழிச் சாலைக்கு வாரியா, ஏத்திட்டுப்போறோம் சவாரியா." 
(நீதி. 13:12)
"வாரேன், WALK-லயாவது RUN-லயாவது வாரேன்,
கண்டிப்பா வாரேன் ; கூட்டிட்டு போயிருங்க . . . "

நானும் என் அத்தை மகனும் - பதமாய் வந்த
கருணைத்தோணியில் தொத்திக்கொள்ள 
அனுமதிக்காக அடையாள அட்டை நகல் கொடுத்தான் ஆல்பர்ட்.
நாலு மாவட்டம் கடந்து எங்க மாவட்ட எல்லைக்குள்ள 
நாங்க நுழைவதற்கு அனுமதி மறுக்க. . .
அய்யயோ! யோனா கதையாகிடக்கூடாதே,
வேண்டினேன், சாமி சித்தம் என்றேன். (யோனா 1-2 அதிகாரங்கள்)
வேண்டிய யோனாவுக்கு நடுக்கடலில் பெரிய மீனைக் கொடுத்தவர்
வேண்டிடும் எனக்கும் நடுநிசியில், நடுரோட்டில் PERMISSION- ஐ கொடுப்பாரல்லோ!

"சோத்துக்கு வழி இல்லை, சொந்த ஊருக்கு போகணும். 
கஷ்டம்யா, கருணை காட்டுங்க. . ." 
அதிகாரி மனதில் கடவுள் இடைபட, மெழுகாய் உருகி 
அன்புடன் விலாசம் வாங்கி வீட்டுக்கு அனுப்பினார்.

கள்ளத் தோணியில் பயணித்திட்டோமோ என்றிருந்த எங்களை
கருணைத் தோணி ஒருவழியாய் கரைசேர்த்தது .. .. ..
காருண்யக் கடவுளின் கருணை தான் என்னே!!!



வைரஸ் கடலில் தைரிய பயணம்!
வைக்கணும் மனதில், ஐயனே சரணம்!!

வீடு வரை பதற்றம்
வீதி வரை கொரோனா – ஊர் (மச்சான்)
காடு (CAR-ரு) வரை உதவி
கடைசி வரை கர்த்தர்! கடைசி வரை கர்த்தரே!!



(கொரோனா காலத்து பயணப் பீதியினாலே வெளி வந்த வரிகளிது. இவ்வரிகள் எழுத பேனாவிற்கு மை ஊற்றிய அண்ணன் SANJEEVI அவர்களையும்,  ஆங்காங்கே  மெருகேற்றிய அண்ணன் SF , அக்கா PHILO அவர்களையும் நன்றியுடன் நினைவுகூருகிறேன்.)

படித்ததில் ன்புறுங்கள்; 
பரமனின் பாதம் தேடுங்கள்; 
பரலோகாசீர்வாதம் பெறுங்கள். 

இறையாசீர் உங்களுடன் இருப்பதாக!!!

Comments

  1. Machie Semma da. . .

    ReplyDelete
  2. சோறு முக்கியம் அமைச்சரே!

    ReplyDelete
    Replies
    1. உண்மை அமைச்சரே. . .

      Delete
  3. கவிதை வடிவில் திரை காட்சியாக கண் முன்னால் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு நன்றி!

      Delete
  4. Nice. Simply superb Anna

    ReplyDelete
  5. Super sir finally you have reached home safely. God's grace. Amen.

    ReplyDelete
  6. அருமை சகோ...

    ReplyDelete
  7. Super sir really great romba feel ayduchu congrats, inum valamudan ungal pathivu iruka valthukiran ,nandri

    ReplyDelete
  8. அருமை அண்ணா

    ReplyDelete
  9. நீ என் சகோதரன் என்னால் முடிந்த உதவியை நான் செய்தேன் thats it.....

    ReplyDelete
  10. மிக அருமை!!! சாகச பயணத்தின் அனுபவங்களை மிக சாதுர்யமாக வசனங்களுடன் இணைத்திருப்பது மிகச்சிறப்பு😊😊😊

    ReplyDelete
  11. 👍Praise God. Finally u r home after all the obstacles😊

    ReplyDelete
  12. Semma sir . another example that God never leave us alone always leads us through many people we come across.

    ReplyDelete
  13. வரிகளை வாசிக்கும் பொழுதே வலிக்கிறது

    ReplyDelete
  14. Very Interesting Lines. Awesome

    ReplyDelete
  15. Well articulated. Rare skill with nice presentation

    ReplyDelete
  16. Lines with full of Emotions. Superb.

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED