அன்னை எனும் ஆலயம்

நமது அன்னைக்காக
தூக்கத்தை தொலைத்தவளுக்காக 
தூக்கி சுமந்தவளுக்காக 
துக்கத்தை தாங்கியவளுக்காக 
துயரத்தை சகித்தவளுக்காக 
தாக்கத்தை ஏற்படுத்தியவளுக்காக
தாகத்தை தீர்த்துவைத்தவளுக்காக 
தர்மத்தை நாட்டி வளர்த்தவளுக்காக 
தானத்தை புகட்டி வளர்த்தவளுக்காக 
திருமறையை ஊட்டிவளர்த்தவளுக்காக
பொதுமறையாய், எந்திரவிசையாம் 
தாய் எனும் தரணி போற்றும் சொல்லுக்காக 
இன்று ஓர் தினம். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

உலகமே உற்று நோக்கிய சில அன்னைகளின் அர்ப்பணிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நான் அவற்றிலும் எனக்கு தெரிந்தவற்றிலும் சிலவற்றை பதிக்கிறேன்.

ஒரு பெண் 18 வயதில் தேவையுள்ளோரின் சேவைக்காக 
தனது வாழ்வை அர்ப்பணிக்கிறாள் (லூக். 10:25-37). 
புறக்கணிக்கப்பட்ட பதர்களின் புது வாழ்விற்கான 
புதையல்களைத் தேடிக்கொடுத்த புண்ணியவதி (சங். 113:7). 
தன் தாயின் மரணப்படுக்கை செய்திக்கேட்டு 
பார்க்கப்போகத் துடிக்கிறாள். 
அனுமதிமறுக்க, அலைமோதுகிறாள்-அமைதியாகிறாள்.
 'மண்ணில் சந்திக்க முடியா உன்னை விண்ணில் சந்திக்கிறேன்' 
என கடிதம் மட்டும் போட்டு விட்டு கடமைக்கு விரைகிறாள். 
தாயின் மரணத்திற்குப் போக முடியாத 
அன்னை  தெரசாவைத் (1910-1997) தான் 
இந்த உலகம் இன்று தாயகவே வணங்குகிறது (மத். 5:14-16).

திண்டுக்கல்லில் பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர் 
(ஜூலை 22, 2016, தினமலர்), சேலம் சங்ககிரியில் போதையால் 
குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர் (ஜனவரி 31,2020, நக்கீரன்).
இதுதான் ஒரு சில அரசுப் பள்ளிகளின் நிலை. 
நான் படித்த அரசுப்பள்ளிக்கூடத்தில், 
ஆசிரியர்கள்  பணிசெய்வது . . . . . . . 
ஆனால் அந்தச் சூழலிலும் மிகப் பொறுப்பாக உண்மையாக 
வேலை செய்த தமிழாசிரியை தான் 
அருட்சகோதரி A. ROSILY (நீதி. 22:29). 
அவர்களது கண்டிப்பும், போதனைகளும் 
எங்களுக்குக் கசப்பும் புளிப்பும் தான். 
ஆனால், இன்றோ எங்களுக்கு அது பசுமரத்தாணி (நீதி. 31:26).
 எங்கள் யாவரையும் தனது பிள்ளைகளைப் போல
 நடத்தியவர் அந்த அன்னை தான்.

மதுரையில் நகைக்கடையில் திருடிய 3 பெண்கள் 
(நவ. 21, 2015, தினமணி), 
நகை மோகத்தால் புது வண்ணாரப்பேட்டையில்
 3 பெண்கள் நகைக்கடையில் துணிகரக்கொள்ளை 
(ஆக. 27, 2017,  தினமலர்). 
பொருள்கள் மேல் அதீத ஆசை கொண்டு 
கொள்ளையடிக்கும் இந்தக் காலத்தில் எனக்கு தெரிந்த
 ஒரு தாய், ஏழைச்சிறுவர்களின் கல்விக்காகத் தனது தங்க 
நகைகளைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார் (லூக். 21:1-4). 
அடுத்தவரின் கல்விக்காகக் கழற்றிக்கொடுக்கும் 
அவள் ஊர்போற்றும் ஒப்பற்ற  அன்னை.

கன்னியாகுமரியில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த
 மகனைக் கொன்ற தாய் (மார்ச் 15, 2020, தினமலர்), 
கேரளாவில் கள்ளத்தொடர்பால் 35 வயது தாயால் 
கொலைசெய்யப்பட்ட 16 வயது மகள் (ஜூலை 1, 2019, ஒன் இந்தியா).
 தவறான நடத்தையால் இந்தச் சமூகம் சீரழிந்துகொண்டிருக்கும்
 சூழலில் கணவன் துணையின்றி பிள்ளைகளை வளர்க்கும்
 ஒவ்வொரு அன்னையையும் நான் 
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் (I இராஜா. 17)
நோபல் பரிசைப் பெற்ற மேரி கியூரி எனும் 
ஒரு ஒப்பற்ற பொக்கிஷம்
 இதே போன்ற சூழலில் பிள்ளைகளை வளர்த்து 
வாழ்ந்து சாதித்திருக்கிறாள்(II  இராஜா. 4).

துணிச்சலை தோளில் தூக்கிச் சுமந்து 
இந்தியாவை ஆண்டு உலகத்தைத் திருப்பிய 
அன்னை இந்திரா காந்தி (1919-1984). அவரைப் போன்ற பலரது 
அயராத உழைப்பு, மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற 
பாத தடங்களே நமக்குப் பாதைகளாகிறது (நீதி.31).

போட்டி நிறைந்த இவ்வுலகத்தில் நம்முடைய படிப்புக்கு 
அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறோம். 
ஆனால்,இறை வார்த்தைகளுக்கும் 
இறை வேண்டலுக்கும் நேரம் தருகிறோமா? 
வேதபண்டிதர்கள் வியந்துபார்க்கும் அளவிற்கு (லூக். 2: 46-48)
இயேசு பெருமானின் தாயார் அவரை 
வசனங்களால் ததும்பும்படி வளர்த்திருந்தார்
(மே 6, நாளொரு மேனி).


இந்த நன்னாளில் நம்மை ஈன்றெடுத்த நமது அன்னைக்கும், 
நம் வழிநெடுகவே நம்மை நல்வழிப்படுத்திய 
அனைத்து அன்னையர்களுக்கும் 
அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளுவோம். 


இறையாசீர் நம் அனைவரோடும் இருந்து 
நம்மை ஆசீர்வதித்து வழி  நடத்தட்டும்.


(இந்த பதிவை படைக்க என்னைத் தூண்டிய அன்பர் தேவா, மெருகேற்றிய அண்ணன் SF, அக்கா PHILO ஆகியோருக்கு எனது அன்பின் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பதிவில் பயணிக்கும் உங்களையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். இறையாசீர் உங்களுடன் எப்பொழுதும் இருந்தாகுக.)

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED