நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க
அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில்
வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக்
கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
லூக்கா 11:13
நடுத்தர குடும்பத்தின் தந்தையிடம் ஒரு குழந்தை
"செயின்"வேண்டும் என்று கேட்டால்,
அவர் "சைக்கிள் செயினா" வாங்கி கொடுப்பார்?
அவர் நிலை எதுவாயினும்
ஆகச்சிறந்ததையே வாங்கிக்கொடுப்பார்
பரம பிதாவானவர் அவரிடத்தில் கேட்கும் எவருக்கும்
தூய ஆவியானவரை துணையாக கொடுக்கிறார்.
ஆம், அதிக நிச்சயமாகவே கொடுக்கிறார்.
தூய ஆவியானவரை துணையாக்குவோம்,
தூய்மையாக வாழ்வோம்.
தூய ஆவியானவர் துணை வந்தால் தூய்மையான வாழ்வுதான்.. பெற்றுக்கொள்ளும்வரை பற்றாயிருப்போம்..
ReplyDeleteAmen
ReplyDelete