இடுக்கமான வாசல்வழியாய்
உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்,
அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும்
அவர்களாலே கூடாமற்போகும் . . .
லூக்கா 13:24
"அவரு ரொம்ப நல்ல மனுஷன், காசு (லஞ்சம்) வாங்குனா
வேலைய கண்டிப்பா முடிச்சுக் கொடுத்திருவாரு. . "
நல்லவனுக்கான வரையறை வரப்பில்லா மண்ணானது,
அறம் இன்று அரிதாகிவிட்டது.
'நாம் வாழ்க்கையில், உண்மையாய் உத்தமமாய் நடப்பது
இயலாத காரியமல்ல, நாம் முயலாத காரியமே.'
சத்திய வேதம் காட்டும் நல்வழியில் நடப்போம்.
அவ்வழி இடுக்கமானாலும் அதன் முடிவு
நம்மை இறைவனிடத்தில் இணைக்கும்.
நீதியின் பாதை நம்மை நித்தியத்தின் பாதையில் சேர்க்கும்!
ReplyDelete