ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது,
பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே;
உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை
அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
லூக்கா 14:8
நாம் அழைக்கப்பட்ட விருந்துகளில், விழாக்களில்,
மேடைகளில் முந்தியிருப்பதையே விரும்புகிறோம்.
அது நன்றல்ல!
நம்மைவிட மேன்மையானவர்கள் இருப்பின்
நாம் தாழ்வான இடங்களுக்குத் தள்ளப்படுவோம்.
பந்திகளில், கூடுகைகளில், ஆலயங்களில்,
திருவிருந்துகளில் கூட நாம் கனத்தை விரும்புகிறோம்.
முதன்மைக்கான சிந்தையே
நம்முடைய இடறல்களுக்கு மூலமாகிறது.
தாழ்மையாக இருக்கக் கற்றுக்கொள்வோம்.
Amen
ReplyDeleteசிறப்பு
ReplyDelete