விருந்து வைக்க விருப்பமா?

நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும்
 சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். . . . 
லூக்கா 14:13-14.

அனாவசியமாக யாரேனும் விருந்து சாலைக்குள் 
நுழைந்துவிட்டால் விரட்டியடித்துப் பழகிவிட்டு, 
பகிரங்கமாக மாற்றி எழுதும்போதே 
எனதுள்ளம் என்னிடம் முரண்படுகிறது. 
ஆனாலும், இனிமேல் நாம் அழைக்கப் பழகுவோம்.

மொய்பணத்தைப் பொறுத்தே வரவேற்பு விறுவிறுப்பாகும்.
புரவலர்களை அல்ல புறக்கணிக்கப்பட்டவர்களை அழைப்போம்.
அவர்கள் நமக்கு பதில் செய்யாவிடினும், 
இறைவன் நமக்கு பன்மடங்கு பதில்செய்வார்.

Comments

  1. ஆமென்!

    விருந்துக்கு பாசமுடன் ஏழைகளையும் அழைக்கப் பழகுவோம்
    சிறந்த பரிசொன்றை ஏழைகளின் கடவுளிடமிருந்து பெறுவோம்
    கருத்து வேறுபாடு, முரண்பாடின்றி அன்புடனிருக்கப் பழகுவோம்
    மருத்துவமோ, மருந்தோ தேவையற்றுப்போகும் என உணர்வோம்

    மொய்ப்பணமல்ல, மெய்க்குணமேத் தேவை என்றுணர்வோம்
    தொய்வில்லாது தேவையுள்ளவர்களுக்கு தொண்டு செய்வோம்
    புறக்கணியாமல் யாவரிடமும் பண்புடனன்புப் பாராட்டுவோம்
    புறவாழ்வில் மட்டுமல்ல அகவாழ்விலும் தூய்மை பெறுவோம்

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED