ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து,
அவைகளில் ஒன்று காணாமற்போனால்,
தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு,
காணாமற்போன ஆட்டைக்
கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
லூக்கா 15:4
100 ஆடுகள் வைத்திருப்பவன், அதில் 1 தொலைந்தால்
பெரிய நஷ்டமில்லையென்று விட்டுவிடுவானா என்ன?
இல்லை! ஆட்டைத்தேடிக் கண்டு, பின்பு அவன் மிகுந்த
சந்தோசமாய்த் தண்டோராப் போட்டு மகிழ்வான்.
அதைப்போல பாதை மாறிய ஒரு மனிதன் பாவ வாழ்வை விட்டு
மனந்திரும்பிப் பரமன் பாதம் சேருவானாகில்,
விண்ணகத்திலே மிகுந்த களிப்பு உண்டாகும்!
தொலைந்த ஆட்டைத்தேடி தம் மந்தையில் சேர்க்க
ஆயன் தயார்!! அர்ப்பணிக்க நாம் தயாரா?
Amen
ReplyDelete