ஒரே சூரியன் ஒரே நிலவு

எந்த ஊழியக்காரனும் இரண்டு 
எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது,. . . 
தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய
 உங்களாலே கூடாது என்றார். 
லூக்கா 16:13

ஒரு தொழிலாளிக்கு ஒரே முதலாளி. 
முதலாளி இருவரானால், வேலைக்காரன் 
வேஷம்போட வேண்டிய நிர்பந்தம், 
அதுவே அவனைக்கொல்லும்  தீப்பந்தம். 
ஆளைக்கண்டால் கும்பிடுவது, 
மறைந்தால் மட்டம்தட்டுவது அறவே கூடாது. 

"'நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்
என்பதெல்லாம் கறிக்குதவாத காகித சுரக்காய்." 
ஒன்று நன்மையாக அல்லது நன்மைக்கு புறம்பாக வாழனும். 
எஜமானாம் இறைவனின் நல்வழியில் நடப்போம்,  
நிறைவாழ்வு வாழ்வோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED