கூட்டாஞ்சோறு

இரண்டு அங்கிகளையுடையவன் 
இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; 
ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். 
லூக்கா 3 : 11

மீனில் முள்ளெடுப்பதை கஷ்டமாக நினைக்கும் நாம், 
அரிசியில் கல்லெடுப்பவர்களை மறந்தே விடுகிறோம்.
நம்மிடத்தில் தேவைக்கு அதிகமாக இருக்கும் 
அடையோ - உடையோ
அதை தேவையுள்ளவர்களுக்கு பங்கிட்டுக்கொடுப்போம்.  

கடக்கும் வழியில் 'நன்மை செய்ய ஆளா இல்லை?' 
என நடையைக்கட்டுகிறோம்,
 "ஏன் அது நாமாக இருக்கக்கூடாது?"
எனவே, நம்மிடமுள்ள அளவுக்கு மீறிய பொருட்களை,
தேவையுள்ளவர்களுக்கு அன்போடு அளிப்போம்.

Comments

  1. ஆமென்!

    முள்ளெடுக்க மீன் சாப்பிடும் போது கூப்பாடு
    கல்லெடுத்தால் தான் சிலருக்கெல்லாம் சாப்பாடு

    தேவை போக மீதி அனைத்தையும் பகிர்ந்திடுங்கள்
    சேவை அன்புடன் செய்து இறையாசீர் பெற்றிடுங்கள்

    நன்மை செய்ய ஆளா இல்லை என கேட்காதீர்கள்
    நம்மை தவிர ஆளே இல்லை என உணர்ந்திடுங்கள்

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
  2. Very reflective.. I'm. Happy for you..

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED