லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்;
. . . நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. . .
அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால்
ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்.
லூக்கா 16:20-22
நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கியது என்றால்,
லாசரு மிகவும் தரித்திரத்தில் இருந்திருப்பான்,
நாய்களை துரத்தக் கூட பெலனற்று இருந்திருப்பான்.
ஆனால் அவனது முடிவோ பரலோகத்தில்
ஆபிரகாமின் மடியில் துவங்கியது.
நமது வருமானம் நிலையில்லாமல் இருக்கலாம்,
தோற்றம் அற்பமாக இருக்கலாம்.
ஆனால் நாம் இறைவனை நிதமும் நினைத்து,
அவரது வழியில் நடந்தால்,
அவரும் நம்மை நினைத்தருள்வார்!
நமது முடிவும் அவருடனே துவங்கும்!!
Amen
ReplyDeleteAmen
ReplyDelete