சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். . .
லூக்கா 18:1
பொதுவாக சோர்வு வந்தால் நாம் இறைவனைத் தேடுவது
நம் மனப்பான்மை. அவரிடம் நாம் கேட்டவுடனே
நமக்குப் பதில் வராவிடில் நம் மனம் சோர்வது இயல்பு.
ஆனால் சோர்வின்றி தொடர்ந்து,
நாம் இடைவிடாமல் இறைவனை வேண்டுவோம்.
நாம் வேண்டிடும் இறைவன்
நமது எல்லா வேண்டுதல்களையும் கேட்பவர் மட்டுமல்ல,
நம் வேண்டுதல்களுக்கு தம் சித்தப்படி பதில் கொடுப்பவர்.
சூழல் கருதி அல்ல, எல்லா சூழலிலும் வேண்டிடுவோம்.
சோர்வின்றி தேவனை தேடிடுவோம்.
ஆமென்!
ReplyDeleteகுறைவுற்ற மனம் இறைவனைத் தேடுவதும் பண்பே - அதுப்போல
இறைவனைத் தேடும் வேளை சோர்வுறுவதும் இயல்பே
நிறை குறை அனைத்தும் அவரிடம் சொல்வதே ஜெபம்
சிறைப் பெற்ற வாழ்வு நற்சீர் பெறுவதே நம் ஜெயம்
வேண்டிடும் பொழுது அதைக் கேட்பவர்மட்டுமல்ல அவர்
வேண்டிடுமனைத்தும் தம் சித்தப்படி கொடுப்பவரும் அவரே
சூழல் கருதியல்ல, எச்சூழலிலும் வேண்டுவதே தேவை
நிழலாம் அவரிடம் வெயிலுக்கு தஞ்சமடைகிறேன் இவ்வேளை
இரியசீர் கிட்டட்டும்!!!
இறையாசீர் கிட்டட்டும்!!!
ReplyDelete