கண்புரையா?

இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.
ஆனாலும் அவரை அறியாதபடிக்கு 
அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. 
லூக்கா 24:15-16

இயேசு மரித்து உயிர்த்தப் பின்பு,
 ஏற்கனவே மூன்றரை ஆண்டுகள் 
உடனிருந்த சீஷர்களோடு, அன்று நடந்து போனார். 
ஆனால், அவர் யார் என்று அறியாதபடிக்கு 
அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது, 
இருதயமும் புத்தியும் மந்தமாக்கப்பட்டிருந்தது. 

நம்முடைய இருதயமும் நினைவும் எங்கே இருக்கிறதோ, 
அதைப் பொறுத்தே நமது நகர்வும், நுகர்வும் அமையும்.
 நம் நினைவு என்றும் இறைவனோடு இருக்கட்டும்! 
நித்தமும் அவர் நம்மோடு நடக்கட்டும்!!
கண்கள் கண்டுணரும் வண்ணம் இதயம் இதமாகட்டும்!!!

Comments