வாரிசுகள்!

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் 
அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, 
அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, 
அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 யோவான் 1:12

இரட்சிக்கப்படுவதற்கு அடிப்படைத் தேவை
 என்ன என்றால், விசுவாசம் மட்டுமே. 
இயேசு என்னும் நாமத்தை விசுவாசித்து 
அவரை ஏற்றுக்கொண்டவர்கள் யாவருக்குமே 
இறைமக்கள் என்னும் அதிகாரத்தை கொடுக்கிறார்.

சரி, அப்படி எத்தனை பேருக்குத்தான் 
அந்த உரிமையும் அதிகாரமும் என்று கேட்போமேயாகில், 
விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் 
எத்தனை பேர்களோ அத்தனை பேருமே.
 இறைநாமத்தை விசுவாசிப்போம்,
 இறைவனை ஏற்று இறைமக்களாவோம்.

Comments