நிகரற்ற நேசம்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை 
விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்
 நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, 
இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 
யோவான் 3:16

படைத்த இறைவனின் பாசப்பிள்ளையாகிய 
ஒரே நேசகுமாரனை விசுவாசித்து அவர் வழி நடக்கும் 
எவரும் கெட்டுப்போகாமல் நித்தியத்தின் வாழ்வை அடைவதே
 அவர் விருப்பம். நம்மேல் வைத்த அன்பினால்
 அன்புமகனையே அனுப்பினார்.

நம்மனைவரின் மீதுள்ள அளவில்லாத அன்பினாலே 
இறைமகன்  மனுமகனாக  மண்ணிற்கு அனுப்பப்பட்டார். 
நம்மேல் அளவில்லா அன்புகூரும்
 இறை இயேசுவை விசுவாசிப்போம், 
அவர் வழிநடப்போம், 
அவரில் நித்தியஜீவனை அடைவோம்.

Comments