சகேயு என்பவன்,. இயேசு எப்படிப்பட்டவரோ
என்று அவரைப் பார்க்க வகைதேடினான். . .
இயேசு அவனைக் கண்டு: சகேயுவே,
நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான்
உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
லூக்கா 19:2-5
இயேசுவைப் பார்ப்பதில் தீராத ஆர்வம் சகேயுவுக்கு!
கடல் பாதி,கரை பாதி என்று தேடவில்லை,
முழுமையாகத் தேடினான். வெளிச்சம் தேடி அலைந்தவனை,
இயேசுபெருமான், "இறங்கி வா,
இன்றைக்கு உன் வீட்டில் தங்கவேண்டும் என்றார்."
தேடிய பரம்பொருளே அவனைப் பார்த்து அழைத்ததால்,
விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென குதிப்பதைப்போல
(பாவத்திலிருந்து பரமனிடம்) துள்ளிக்குதித்து வந்திருப்பான்.
நாமும் உண்மையாக முழுமனதோடு தேடினால்,
நாம் தேடும் இயேசு நம்மோடு கூட தங்க வருவார்.
Amen
ReplyDelete