உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்.
லூக்கா 6 : 27
பகை என்பது சிலந்திக்கூடு கட்டுவது மாதிரி.
அற்பமாக ஆரம்பித்தாலும் அது ஆலமரமாக ரூபமெடுக்கும்.
நம்மிடத்தில் பகையுணர்வு செழிப்பதும் - ஒழிப்பதும்
நமது கையில் தான் உள்ளது.
"அன்பே ஆயுதமாகட்டும்."
நம்மை பகைக்கிறவர்களிடத்தில்
நாம் அன்பு காட்ட அழைக்கப்பட்டிருக்கிறோம்!
வாசிப்பதற்கு இனிமையாக இருக்கும் இந்த சொற்றொடர்,
வாழ்க்கைக்கு சிரமம்!!
சிரமத்தை சிலாக்கியமாக்க இறைவனிடம் இரைஞ்சுவோம்!!!
ஆமென்!
ReplyDeleteசத்துருக்களை சினேகிப்போம்
பகைஞ்சருக்கு பரிசளிப்போம்
எதிரிகளுக்கு ஏதவாது நன்மை செய்வோம்
உதவாதவர்களுக்கு உணவளிப்போம் - இவ்வனைத்தையும்
உண்மை அன்புடனும், உணர்வுடனும் செய்வோம்.
அன்பே ஆயுதமாகட்டும்
அன்பின் தெய்வம் எங்களுக்கு உதவட்டும் - பாவிகட்காய்
உதிரத்தை ஊற்றியவரே
சிரமத்தை சிலாக்கியமாகட்டும்!
இறையாசீர் கிட்டட்டும்!!
Amen
ReplyDelete