பரிசேயன்: . . உபவாசிக்கிறேன், . .
தசமபாகம் செலுத்திவருகிறேன் என்றும்,
. . . ஆயக்காரன் தூரத்திலே நின்று . . .
தன் மார்பிலே அடித்துக்கொண்டு;
'தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றான்.
லூக்கா 18:11-13
இருவர் சாமி கும்பிடப்போனதில், ஒருவன் தன்னைத்தான்
உயர்த்திக்கொடிப் பிடித்து ஹிமாலய மடத்தனம் செய்தான்.
மாட்சியையும் - ஆட்சியையும் ,
பெற்ற செல்வாக்கையும் பெருமூச்சு வாங்கபேசினான்.
இறைவனால் மறக்கப்பட்டான்.
மற்றொருவன் தன்னை வெறுமையாக்கி தனது கண்ணீர்
தடாகத்தால் இறைவனது பாதத்தை நனைத்தான்,
தனது மார்பிலே அடித்துக்கொண்டு அழுது
மன்னரின் மனதிலே இடம் பிடித்தான்.
தன்னை தாழ்த்தினான், தேவனால் உயர்த்தப்பட்டான்.
அருமையான வரிகள்
ReplyDelete