உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;
உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
லூக்கா 6 : 28
உங்களை மண்ணை வாரி தூற்றினாலும்,
மலிவான வார்த்தைகளால் வெட்டி வீழ்த்தினாலும்
மனமடிந்து போகாதீர்கள்.
அவர்களை இறைமகன் பெயரால் ஆசீர்வதியுங்கள்,
இறைவேண்டல் செய்யுங்கள்.
நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிப்பது,
வெட்கப்படுத்தியவர்களுக்கு வேண்டுதல் செய்வது சாத்தியமா?
சுயமாய் நின்று சிந்தித்து பார்த்தால் சாத்தியமில்லை!
அருள்புரியும் இறைவன் துணைபுரிந்தால் சகலமும் சாத்தியம்.
Amen
ReplyDeleteAmen
ReplyDeleteஆமென்!
ReplyDeleteதூற்றுகிறவர்களை தேற்றவும்
வெறுப்பவர்களை நேசிக்கவும்
சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும்
அசிங்கப்படுத்துகிறவர்களுக்கு அன்பு காட்டவும்
காயப்படுத்துகிறவர்களுக்கு காயம் கட்டவும்
மனதொடிக்கிறவர்களுக்கு மன்னிப்பு அருளவும்
தெரிந்து அழைக்கப்பட்டுளோம் சருவசிருஷ்டிகரால்
புரிந்துணர்ந்து வாழ்வோம் சீரியசான்றோனாய்
சரிந்திடமால் சார்ந்திருப்போம் சருவலோகாதிபதியை
இறையாசீர் கிட்டட்டும்!!