மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்;
அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று
தீர்க்கப்படாதிருப்பீர்கள்.
லூக்கா 6 : 37
பிறரை பார்த்த பார்வையிலே நாம் பட்டென அவர்களின்
பண்புகளை தீர்மானித்துவிடுவோம்.
சிலவேளை ஒருபடி மேலே போய், நம்மை நாம் நீதிமான்களாக்கி
பிறரை எளிதில் நியாயம் தீர்த்துவிடுவோம்.
மற்றவர்களை பார்த்து குற்றவாளிகள் என்று தீர்ப்பது தவறு!
ஒருவேளை நம்மை நமது கடவுள்,
நம்முடைய குற்றங்களுக்கு ஏற்றபடியே தீர்பிட்டால்?
நாம் பிறரை தீர்ப்பிடாமல், நம்மை நாம் காத்துக்கொள்வோம்.
Amen
ReplyDeleteஆமென்!
ReplyDeleteநியாயம் தீர்க்காதீர்கள் மற்றவர்களை
நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள் நீங்களும்
பழிக்காதீர்கள் மற்றவர்களை
பழிக்கு ஆளாகமாட்டீர்கள் நீங்களும்
இல்லையெனில்,
வளைதடிப் (வளரி) போல் திரும்பி வரும்
சளைக்காமல் நாம் பேசிய குறைகள்
திகிரிப் போல் திரும்பி வரும்
எகிரி குமுறி நாம் வீசிய சேறுகள்
பூமராங் போல் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும்
பூதாகரமாய் நாம் ஏற்படுத்திய ஆற்றவியலாக் காயங்கள்
அதனாலே ,
மன்னியுங்கள் மற்றவர்களை
மன்னிக்கப்படுவீர்கள் நீங்களும்
இறையாசீர் கிட்டட்டும்!!