சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்,
சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்;
ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
லூக்கா 10 : 19
நமக்கு இந்த சூழலில் மட்டுமல்ல எந்த சூழலிலும் பிரச்சினைகளும்,
போராட்டங்களும் நம்மை சுற்றி சுழற்றி
புரட்டி எடுத்தாலும் வீழ்ந்துவிடமாட்டோம்.
சேதமின்றி இறை பலத்தோடு வெற்றிகொள்வோம்!
பதறவும் - கதறவும் அல்ல, பாம்பையும் தேளையும் மிதிக்கவும்,
பாழ்படுத்தும் எல்லா சூழலை ஜெயிக்கவும்
நமக்கு இறைமகன் அதிகாரம் கொடுத்திருக்கிறார்!!
துரும்போ எறும்போ எதுவும் நமக்கு தீங்கிழைக்காது!!!
ஆமென்!
ReplyDeleteதுரும்போ எறும்போ
கரும்போ சருகோ
இனிப்போ கசப்போ
தனிமையோ கூட்டோ
வறுமையோ செழுமையோ
விருப்போ வெறுப்போ
சிறிதோ பெரிதோ
அதுவும், இதுவும், எதுவும்
நமக்கு தீங்கிழைக்காது!
சர்வ வல்லவர் நம்முடனிருக்கிறார்!
ஆர்வமுடன் பணிச் செய்ய அதிகாரம் கொடுத்திருக்கிறார்!!
இறையாசீர் கிட்டட்டும்!!