சிறிதென்ன பெரிதென்ன

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் 
அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், 
கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் 
அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். 
லூக்கா 16:10

சின்ன விஷயத்தை சமாளித்துக்கொள்ளலாம். 
பெரிய காரியங்களில் நீதியோடு நடந்துகொள்ளலாம் 
என கட்டுக்கட்டுவது தவறு.
கொஞ்சத்தில் அநீதியாக இருந்து பழகிக்கொண்டால், 
பழக்கம் நம்மை பாழாக்கிவிடும்.

சிறிய காரியமோ, சில்லரை விஷயமோ
நாம் உண்மையுடன் இருக்க வேண்டும். 
நமது நல்மனசாட்சியுடன் முரண்டுபிடிக்கக்கூடாது.
 உண்மையுள்ளவனுக்கு சிறிதென்ன பெரிதென்ன, 
சகலத்திலும் உண்மையையிருப்பான்.


Comments