கூழுக்கு வழி இல்லனாலும், COOLING BEER தான் வேணுமாம்

(படுக்க பாய் இல்ல, உருப்படியான வீடு இல்ல, கிழியாத சேலை இல்ல, குடிக்க கூழ் இல்ல. . . ஆனா COOLING BEER தான் வேணுமாம்!
கடந்த இரண்டு நாளில் 294 கோடியத் தொட்ட சரக்கு சம்பவத்தை இங்கு வேதனையோடு வெதும்புகிறேன்.)


இந்த நாட்கள் வானம் பாடிகளை ஞானம் கற்க
ஞாலம் முழுக்க வீட்டுச்சிறைபிடித்தது.

மாறி மாறி வரும் மழையும் வெயிலும்
நம்மை வாட்டி வதைக்கிறது.
நச்சுக் கிருமி நம்மை அச்சுறுத்துகிறது.

பல்லாங்குழியும் தாயக்கட்டமும் சீட்டுக்கட்டும்
நம் மேல் காதல் கொள்ளுகிறது.

ஊரே முடங்கிக் கிடந்த இந்த காலத்தில் தான்
மதுக்கடைகளும் மூடிக்கிடந்தது.

எந்த புண்ணியவான் மனசுவச்சானோ,
42 நாள் கழிச்சு கடையை தொறந்துட்டாங்க.

கொரோனாவாது சொரனாவாது,
செத்தாலும் குடிச்சிட்டு சாவோம்.

பட்டாசு வெடிக்கிறாங்க, கேக் வெட்டுறாங்க,
சுண்ணாம்பு வெள்ளை அடிக்கிறாங்க, விழா எடுக்குறாங்க.
வாடி வாசல் கூட இப்படி தயாராகிருக்காது.

பல DAY & NIGHT குடிக்காம இருந்தவன்,
DAYNIGHT ஆவது கிடைக்காதான்னு ஏங்க ஆரம்பிச்சுட்டான்.

ஒரு குடிகாரனுக்கு. . . , மன்னிக்கணும்,
தயவுகூர்ந்து மன்னிக்கணும்!
குடிகாரன் அல்ல, மதுப்பிரியன்.
புதுசா இருக்கா, தமிழ்ப்பிரியன், கவிப்பிரியன்
மாதிரி மதுப்பிரியன், பழகிக்கோங்க!

ஒரு மதுப்பிரியனுக்கு ஒருநாளைக்கு 1 FULL தான்.
இல்லனா அதுக்குப் பதிலா 4 QUARTER
அல்லது 4 BEER வாங்கிக்கிறலாம்.
OPTION நல்லா இருக்கா? இருக்கும், இருக்கணும்லோ!

மதுப்பிரியர்கள் 6 அடி தூரம்
சமூக இடைவெளியைக் கடைபிடிக்கணுமாம்.
(6 அடியா. . . , ஏதும் உள்குத்து இருக்குமோ?)
மதுப்பிரியர்கள் குடை கொண்டு வரவேண்டுமாம்.
(காரணம் ? . . . இது உங்கள் கற்பனைக்கு)
ம.பி. களின் வயதின்படி நேரத்திற்கு மது வழங்கப்படுமாம்.
மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்படுமாம்.
ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி WINESHOP ஆகுது. (ஆபகூக் 2:15)
ஐயோ பாவம்!
COURT மூட சொல்லி தான் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு
GATE OPEN பண்ணுனது  ரொம்பத் தப்புன்னு 
மதுப்பிரியர்களுக்கு கன்னத்துல ஒன்னு சப்புன்னு
கல்லா கட்டி 294 கோடிய சுருட்டிடங்களே கப்புன்னு!

கடை திறந்தது தான் தாமதம்,
மறந்திருந்தவன்(ர்) எல்லாம் மட்டையாகிட்டான்(ர்).
சாப்பாடு முக்கியம் இல்ல;
சரக்கு தான் முக்கியம்னு சொல்றான்(ர்).

திருவண்ணாமலை பாட்டி, 
"பொன்மானைத் தேடி" பாட்டு பாடுறாங்க.
ஒருத்தன் வாங்குன பாட்டில கழுவுறான்
(கொரோனாவ கொல்லுறானாம்)

சாக்கடைக்குள்ள விழுந்து
நீச்சலடிக்கும் மதுப்பிரியர்கள்.
பாட்டிலுக்கு முத்தம் கொடுக்கும் தாத்தா. . . 
தீரா வெயிலில் காலுருகி, தேகம் உருகி,
மாவட்டம் உட்டு மாவட்டம் போறாங்க. . . 
கொரனா தடுப்பு மருந்து வாங்குற மாதிரி
அவ்ளோ பெரிய வரிசை (பாதுகாப்புடன்),
ஆனா ஆயிரம் ரூவா வாங்குறதுக்கு தள்ளு முள்ளு.
ஆக, தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கு 
(சென்னை தவிர) வாழ்த்துகள்...! (ஏசாயா 5:11)

பாவம் போலீஸ். . . . உங்களுக்கு தலை வணங்குகிறேன்.


ஆனா என்ன? ஒரு படி மேல போய்
கூடன்குளத்துல பெத்த தாயை கொல்லுறான்(ர்),
கூட பொறந்த தம்பிய கொல்லுறான்(ர்),
தேனி பக்கம் நொறுக்குத் தீனிக்கு கைகலப்பு,
மதுரையில தீக்குளிப்பு . . . 
ஒரே நாளுல இவ்வளவா? இறைவா. . . !!

தொழில் வேற இல்ல, கடைய வேற தொறந்தாச்சு.
இனிமே, "ஜிமிக்கி கம்மல், எங்கம்மே ஜிமிக்கி கம்மல்"
பாட்டு பாட வேண்டியதுதான்.

கூழுக்கு வழி இல்லனாலும்,
COOLING BEER தான் வேணும்னு அடம்பிடிக்கிறான்(ர்).

பேரு KNOCK OUT HIGH PUNCH, 
பாவம் அவனே KNOCK OUT ஆகிட்டான்.

சில பேரு ஓசிக் குடி குடிச்சாலும், R.C. தான்.
ROYAL EXPERIENCE குடிக்கிறான்,
குடிச்சிட்டு காவாய்க்குள்ள கவுந்துறான். (அவனுக்கு அது R.E.)

OLD MONK வாங்குறதுக்கு பொண்டாட்டி GOLD-அ கழத்திரான்.
1840-னு பேரு வச்சிருக்கான்,
18 வயசுப்பையனும் குடிக்கிறான், டேய் 40 ல முடிஞ்சிர போறடா! 

K.F.-அ விட CORONA EXTRA BEER க்கு DEMAND ஜாஸ்தி . . . 
NAPOLEAN உள்ள போன உடனே SOCRATES-அ மாறிறான்.
"சரக்கோடு இரு, மப்பு தெளியாமல் இரு,
கொரோனா வந்தா செத்திரு"-னு  சொல்லாம சொல்லிட்டாங்க.
கடைய துறந்துட்டாங்கன்னு
CONTROL இல்லாம போய் குடிக்கிறது முட்டாள்தனம். (நீதி. 20:1)

இதுல WINESHOP தொறந்தா,
CHURCH தொறக்கணும்னு, ஒரு கூட்டம்.
ஆலயக் கதவு மூடியிருந்தால் என்ன?
உங்கள் இதயக் கதவுகள் திறக்கப்படட்டும்.

குடிச்சிட்டு வெறி கொண்டு தாயை கொல்லுறானே (எபே. 5:18)
அவனுக்காக, அவனை போன்றோருக்காக 
இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

அளவுக்கு அதிகமா குடிச்சிட்டு,
நிர்வாணமா ரோட்டுல விழுந்துகிடக்கானே (நீதி. 23:29-35)
அவனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஒரு SNACKSஐ காரணம் காட்டி,
பழைய பகையை வச்சு அடி தடி, கைகலப்பு . . (கலா. 5:19-21)
அவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

இனி மேல் வரும் காலங்களுக்காக,
இறைவனின் இரக்கம் வேண்டி,
தொடர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள்.

நம் குடும்பத்தில் யாரேனும் இந்நிலையில் இருந்தால்
அவர்கள் மனம் திரும்ப வேண்டுமென
நம்பிக்கையோடு வேண்டுதல் செய்யுங்கள் (மத். 21:22).

எவ்வளோவோ மருந்து கொடுத்தும் அவர் மாறவில்லையா?
அதற்கு அடிமையாகி விட்டாரா?
மது, மாது, சூது அல்லது  வேறு எதுவாக இருந்தாலும்,
இறைமகனிடம் தொடர்ந்து வேண்டுங்கள்,
அவர் அனைவரையும் மாற்ற வல்லவர். (யோவான் 8:34-36)

இறை இயேசுவில் நல்லவர்களே, 
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

(இந்தப் பதிவை நெடுகவே மெருகேற்றிய அண்ணன் SF, அக்கா PHILO ஆகியோருக்கு எனது அன்பின் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பதிவில் பயணிக்கும் உங்களையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். இறையாசீர் உங்களுடன் எப்பொழுதும் இருந்தாகுக.)

Comments

  1. சிறப்பு. . . மிக சிறப்பு

    ReplyDelete
  2. Machan semmaiya eluthurea da. . . Kalakkurea. . . Vaazthukkal Machan. Kavi pulamaikku Paaraatukal.

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு மாப்பிள்ளை

    ReplyDelete
  4. Awesome Lines about TN & TASMAC

    ReplyDelete
  5. மிக சிறப்பான பதிவு

    ReplyDelete
  6. மானங்கெட்ட சமூகம் . .
    . தரமான பதிவு. . . .

    ReplyDelete
  7. Hahahahah. Machan nee en Class mate; this is for Glass mate. Sooper da

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED