வலுவான வலிமை

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது 
நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், 
சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், 
எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.  
அப். 1:8

பரிசுத்த ஆவியானவர் யார்யாருக்கெல்லாம் உரியவர்? 
என்று கேள்விக்கு பதில்;  பரமபிதா, தம்மிடம் 
வேண்டிக்கொள்ளும் எவருக்கும் (அனைவருக்கும்) 
தூய ஆவியானவரை ஈவாக அருளுகிறார் என்பதே.

அவர் நம்மிடம் வரும்போது 
நாம் பெலனடைந்தவர்களாகிறோம். 
தூயாதி தூயவரை துணையாக்கிய நாம், 
செல்லும் இடமெங்கும் அவருக்கும் உலகத்திற்கும் 
சாட்சிகளாக வாழ்வோம். 

Comments