அன்பே பிரதானம்

எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் 
அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு 
தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். 
அப். 10:28

இயேசுவானவர் குஷ்டரோகிகளைத் தொட்டுச் சுகமாக்கினார், 
பிறவிக்குருடனைத் தொட்டுச் சுகமாக்கினார். 
இப்படி, நாம் வாழ்வதற்கு எண்ணற்ற 
மாதிரியைக் காட்டிச் சென்றிருக்கிறார். 
முன்மாதிரிகளை பின்பற்றுவோம்.

திருவார்த்தையை போதிக்கும் 
திருச்சபைகளுக்குள்ளேயே சாதிப்பாகுபாடு; 
சகமனிதனையும் எதிராக்கும் சாதிவெறி, இனவெறி. 
பாகுபாட்டைப் புறந்தள்ளி பரமனின் அன்பைப் 
பாரெங்கும் பறைசாற்றுவோம். 
திருமறைக்குத் திரும்புவோம்.

Comments