ஏற்கப்படும் - அருளப்படும்

உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் 
தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. 
அப். 10:31

நம்முடைய ஜெபங்களும் விண்ணப்பங்களும்
 இறைவனை நித்தமும் நிச்சயம் எட்டும்.
 ஜெபம் கேட்கப்படும், தானதருமங்கள் நினைக்கப்படும்,
 பதிலும் அருளப்படும். பதில்கள் தாமதமாகலாம், தடைபடாது. 
ஏனெனில் இறைவனது தாமதங்கள் மறுப்புகள் அல்ல.

நம்முடைய ஜெபங்களைக் கேட்கும் தேவன், 
நம்முடைய வாழ்வையும் பார்க்கிறார். 
நம்முடைய நற்செயல்களால் அவர் 
அளவில்லா ஆனந்தம் கொள்கிறார். 
பேரானந்தம் அடையும் கர்த்தர் 
கிருபையாய் நமக்கு பதில் தருவாராக. ஆமென்!

Comments