நிலைத்து நில்

ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு 
அவனுடைய(பவுல்) கையைக் கவ்விக்கொண்டது. .. . 
அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, 
ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.  
அப். 28:3,5

'விரியன் பாம்பு கவ்விக்கொண்டது. எட்டி நின்று 
வேடிக்கை பார்த்தோரெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசினர்.'
பவுலோ விசுவாசத்தோடே வாழ்ந்தார். 
சிறு வீக்கம் கூட வராமல் கர்த்தர் அவனை காப்பாற்றினார். 

'பிரச்சனைகள் சில வேலை கழுத்தைக் கவ்வி கொள்ளலாம். 
பார்ப்போர் பரியாசம் செய்யலாம்.' 
நம்முடைய விசுவாசத்தில் நாம் உறுதியாய் நிற்போம். 
விசுவாசிப்போரின் ஆபத்தையும் கர்த்தர் ஆசீர்வாதமாக்குவார்.

Comments