தயாநிதி

புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் 
இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; 
பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, 
அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். 
அப். 28:8

பவுலடியார் இருந்த இடத்தில் ஒரு வயோதிகர் 
வியாதியால் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். 
பவுல் அவரைத் 'தேடிப்போய்' அவருக்காக 
இறைவனிடத்தில் 'வேண்டுதல் செய்து'
அவர்மேல் 'கைகளை வைத்து' குணமாக்குகிறார்.

வியாதியோ கஷ்டமோ எதுவாயினும்
 நம் கண்முன்னே ஒருவர் அவதியுறுவாராகின், 
நாம் அவர்களை நாடிச்சென்று அவர்களுக்காக 
ஜெபிப்பதிலும், கொடுப்பதிலும் 
தாராளமான மனம் தந்து ஆண்டவர் அருள்புரிவாராக.

Comments