நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்
தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ரோமர் 5:1
தேவ கிருபையினாலே நாம் மீட்கப்பட்டு
இறை விசுவாசத்தினாலே நீதிமான்களாகிறோம்.
நமக்காக தன்னையே ஈந்த இறைமகன் இயேசுவின் மூலம்
இறைவனிடத்தில் சமாதானமும் பெற்றிருக்கிறோம்.
நமக்கு தூங்குவதற்கு அதிக நேரம் இருக்கிறது;
ஆனால், தூக்கம் அதிக நேரம் இல்லை!
அனைத்தும் அருகில் இருந்தும்,
ஏதோ இல்லாதது போல உள்ளுணர்வு!!
நம் மனதின் காலியிடமோ, வெற்றிடமோ
தேவ சமாதானமே அதை நிரப்பும்!!!
Amen
ReplyDelete