கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?
ரோமர் 8:36
ஏற்ற இறக்கங்கள் வாழ்வோடே இயங்கும். வாழ்வின் படிநிலைகளோ,
சூழ்நிலைகளோ, வியாதியோ, பசியோ, பாடுகளோ. . .
இவைகளா கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிக்கும்?
இல்லை, எதுவும் நம்மை பிரிக்க இயலாது.
சிறு சிறு சறுக்கல்கள் வந்தவுடன் மனம், மைதானத்தில்
உதைக்கப்பட்டப் பந்தாய் அங்கும் இங்கும் அல்லாடும்.
ஆனால், அவருக்கு நம் மேல் உள்ள அன்பே,
நம்மை அவரோடு மின்காந்தமாய் ஈர்க்கும்.
அந்த அன்பில் பேதமில்லை, ஆதலால் நமக்கு பிரிவில்லை!
Amen
ReplyDelete