ஆப்ஜெக்ஷன் மை லார்ட்

மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?
 உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனை நோக்கி: 
நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? 
ரோமர் 9:20

ஒரு பானையானது குயவனைப்பார்த்து என்னை ஏன்
 இப்படிப் படைத்தாய் என கேட்பது நியாயமா? 
இந்தக் கேள்வி குயவனின் படைப்புத்திறனைக் 
கேள்வி கேட்பதற்கு சமமே. 
நாம் குயவன் எனில் பானையின் கதி என்ன? 

நம்மைப் படைத்த இறைவன் மிகவும் நேர்த்தியானவர்;
 நம் ஒவ்வொருவரையும் தனிச் சிறப்போடு தான் படைக்கிறார். 
மற்றவர்களோடு ஒப்பிடாமல், நம்முடைய தனிச்சிறப்பு அறிந்து 
அவர் நமக்காக குறித்த பாதையில் பயணப்படுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED