பார்த்த பார்வையிலே

தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், 
நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
யோவான் 7:24

'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்', 
என்பதைப் போல, நாமும் வெளிப்பக்க அட்டையை வைத்தே, 
புத்தகத்தின் நடுப்பக்கம் வரைத் தீர்மாணிக்கிறோம். 
அதின் உள்ளே உள்ள அறிவையும், 
அரனையும் கற்றுக்கொள்வதெப்படி?

உண்மையை ஆரத்தழுவுதலே நமக்கு 
ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். 
எந்தச் சூழலிலும் நாம் வெளித்தோற்றத்தை வைத்து 
எதையும் தீர்ப்பிடாமல், நீதியின்படியே நிலைநிற்போம். 
செல்லும் இடமெங்கும் சத்தியத்திற்கு சாட்சி பகர்வோம்.

Comments