அச்சாணி

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; 
தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்,
 என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 
யோவான் 14:1

மன அழுத்தத்தால் மடிவோருக்கு வரையறையில்லை; 
அது வழிப்போக்கனாய் வாழ்வோனுக்குமுண்டு, 
வானுயர கோபுரத்தானுக்குமுண்டு. 
யாரும் விதிவிலக்கல்ல! 
ஆனால், அழுத்தப்படுவோருக்கெல்லாம் ஆறுதல் நிச்சயமுண்டு.

கொத்துகொத்தான சாவு நம்மைச் 
சரமாரியாகக் கலக்கமடைய செய்திருக்கும். 
கலக்கம் வேண்டாம்; கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார். 
இறைவன் மேலும், இறைமகன் மேலும் 
நமக்குள்ள விசுவாசமே அதற்கு அச்சாரம்.

Comments