அறுதியிட்டுச் சொல்வதாவது. . .

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,
 நீங்கள் என் நாமத்தினாலே 
பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ 
அதை அவர் உங்களுக்குத் தருவார்.
யோவான் 16:23

இந்தப் பூமியின் மக்களைப் பார்த்து 
இயேசு பெருமான் அறுதியிட்டு சொல்கிறார். 
'நீங்கள் என் பெயரால் பரமபிதாவை வேண்டினால், 
உங்கள் மகிழ்ச்சி நிறைவாய் இருக்கும்படி 
அவர் அதை நிச்சயம் உங்களுக்கு அருளுவார்.'

நாம் பிதாவினிடத்தில் இயேசுவின் நாமத்தினாலே வேண்டுதல் 
செய்கையில், இயேசு கிறிஸ்துவும் நமக்காக வேண்டுதல் செய்வார்.
 எனவே, துவக்கம் நம்மிடமிருந்தே தான் துவங்க வேண்டும். 
வேண்டிடுவோம் - பெற்றுக்கொள்வோம்.

Comments