பிடிச்சிருக்கா?

நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; 
நான் விரும்புகிறதைச் செய்யாமல், 
நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
ரோமர் 7:15

நமது பழக்கவழக்கங்கள் நமக்கே பிரியமில்லாமல் இருக்கலாம்.
சின்னச்சின்ன விஷயங்கள் என்றெண்ணியவையே 
நம்மைச் சிறைபிடித்திருக்கலாம். விடுதலையை நாடினாலும் 
அது வெகுதூர வெளிச்சமாகவே இருக்கலாம்.

நன்மை செய்ய விரும்பும் நம்மிடம்
நன்மை இல்லையே என வருந்தவேண்டாம். 
நிர்பந்தமான மனுஷனாகிய நமக்கும் 
நம் வாழ்வில் விடுதலையுண்டு. 
சிறைவாழ்வு மறைந்து சீர்மிகு வாழ்வு மலர்ந்திட 
விண்தந்தையிடம் மன்றாடுவோம்.

Comments