திடன்கொள்ளுங்கள்

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, 
ஆனாலும் திடன்கொள்ளுங்கள்;
 நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். 
யோவான் 16:33

நமது வாழ்க்கை தென்றல் பட்டாடும் தென்னங்கீற்றைப் போல 
இலகுவானதாக இல்லையே என ஏக்கமா? 
'உங்களுக்கு உபத்திரவங்கள் வரலாம்' என்று சொல்லவில்லை; 
'உபத்திரவங்கள் உண்டு' என்று 
மிகத்தெளிவாக சொல்கிறார் இறைமகன்.

உலகத்தில் 'உபத்திரவங்கள் உண்டு' என்று சொல்லும் அவர் 
அதோடு விட்டுவிடவில்லை;
'ஆனாலும் திடன்கொள்ளுங்கள்' என்று ஊக்கமும் தருகிறார். 
ஏனெனில், உலகத்தை ஜெயித்த அவரே, 
நமக்கும் உபத்திரவங்களில் ஜெயம் கொடுப்பார்.

Comments