இதயத்தோடு இணங்குங்கள்

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 
ரோமர் 12:15

பெருவாரியான இடங்களில் தவறான தனித்துவத்தைக் காட்டுவது 
தான் அநேக அதிர்வுகளுக்கு ஆரம்பப்புள்ளியாகிறது. 
சென்றடையும் இடத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றும்
 இத்தகவமைப்பை தண்ணீரிடம் கற்றுக்கொள்ளவேண்டும். 

இடத்திற்கு ஏற்றார் போல் மாறுவது என்பது, 
இடத்திற்கு இடம் மாறுவதல்ல. அது ஒரு இணக்கத்திறன்.
அழுதுகொண்டு இருப்பவனிடம் ஆறுதல் சொல்லவும்,
மகிழ்வோரோடு அகமகிழவும் அழைக்கப்படுகிறோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED