(ஜூலை - 1 - 1882 முதல் ஜூலை - 1 - 1962 வரை இந்தியாவின் மேற்கு வங்கத்தில் வாழ்ந்து மருத்துவதுறையால் மக்களுக்கு அரும்பெரும் சேவைசெய்த மாமனிதர், மருத்துவர் பிதன் சந்திர ராய் என்பவரை போற்றும் விதமாகவும், ஒட்டுமொத்த இந்திய மருத்துவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.)
| Source: in.pinterest.com |
மருத்துவர்களுக்காக ஒரு சிறிய வாழ்த்து மடல்
மகத்தான உடம்பை வியாதியின்
மேய்ச்சலிலிருந்து காக்கும் போராளிகளே,
பிறருக்காகவே உழைக்கும் உங்களுக்கான நாள்;
இந்திய தேசிய மருத்துவர்களுக்கான திருநாள்!
ஆடுமேய்க்கும் அப்பிராணியும் சரி,
ஆகச்சிறந்த அறிஞனும் சரி,
உங்களுக்கு முன் பணிவார்
உங்கள் வாக்கை மெய்யென ஏற்பார்!
உங்கள் திறமையால் சில இதயங்களும் இடமாறும்,
கண்களும் ஒளிபெறும் சிறுநீரகம் சீராகும்,
ரத்தமெல்லாம் சுத்தமாகும், எல்லாம் சாமி சித்தமாகும்.
ஆனாலும் கொடுமை உங்கள் பெயரிலும்
சில போலிப்பதர்கள் - முள்ளுள்ள புதர்கள்.
அறியாமை சமூகத்தின் இருள் நீக்க,
சுண்ணாம்பு வெள்ளையடிக்க - உளமார
வெள்ளை உடையனிந்த நல்ல உள்ளங்களே,
நீங்கள் கத்தியெடுத்தால் மட்டும் தான்
நானிலமும் நன்மை பிறக்கிறது!
தொட்டுவிட்டால் தொற்றிவிடும்
பட்டுவிட்டால் பரவிவிடும் - எனினும்
விட்டுவிட்டுச் செல்லாத உம் புகழ்
எட்டுத்திக்கும் பூவாய் மணக்கும்
கற்கண்டு பாலாய் இனிக்கும்!
காலமில்லா நேரமில்லா பொழுதிலும்
பசியறியா தூக்கமறியா ஓட்டத்திலும்
நண்பகலானுலும் கும்மிருட்டானாலும்
வேளையறியா வேலைப்பார்க்கும் உங்களையும்
உயிரே போகும் நிலையிலும்
உயிர் காக்கும் உம் அர்ப்பணிப்பையும்
எப்படி நான் புகழுவது?
உன்னதமான உயி(ய)ர்பணி செய்யும் உமக்கு
வாடாத வெள்ளைத் தாமரையும்
மணமான சந்தன பவுடரையும்
பன்னீர் நிரம்பிய கொப்பரையும்
அள்ளி இரைக்க ஆபரணங்களையும்
வைத்து தப்பாது வாழ்த்தினாலும் அது ஒப்பாது!.
உங்கள் முகத்தின் மென்மையான சிரிப்பு
வியாதியை விரட்டும் நன்மையான நெருப்பு.
உங்கள் கழுத்தில் தொங்கும் STETHOSCOPE
எங்கள் இதயத்தை படம் பிடிக்கும் BIOSCOPE.
உங்கள் ஆறுதலான ஊக்கம் தரும் பேச்சு
எங்கள் வாழ்நாளை அதிகரிக்கும் உயிர்மூச்சு.
உங்கள் தன்னலமற்ற சேவை தொடரட்டும்!!
எங்களின் அன்பும், இறைவனின் ஆசீரும் பெருகட்டும்!!!
| Source: happydoctorsday.com |
(வழக்கம்போல வழிகாட்டிய அண்ணன் SF அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.)
அருமையான பதிவு ..... மகிழ்ச்சி
ReplyDeleteமகிழ்ச்சி ரா.பா.
DeleteSuper thambi 👍
ReplyDeleteThanks Aras Anna
DeleteAwesome
ReplyDeleteThanks Kevin
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHappy doctor's day.....
DeleteReached Vino
DeleteSuberb jesman
ReplyDeleteThanks Ramya
DeleteSuper anna
ReplyDeleteThank You
DeletePraise the lord Anna !
ReplyDeletePraise God Mathew
Deletesuper anna!
ReplyDeleteShangavi. . . Very kind of you
DeleteAnnna kalakiteenga. I will forward to all my Doctor frnz
ReplyDeleteSuperb. Well done
DeleteSuper Jesman. Amazing lines with feelings.
ReplyDeleteThank God
DeleteRoyal Salute to all Doctors. Congratz and wishes for this article thambi.
ReplyDeleteSalute . . . Again Salute. . . Again . . . .
Deleteமருத்துவர்களுக்கும் மருத்துவத் துறைக்கும் தலை வணங்குகிறேன்
ReplyDeleteமகிழ்ச்சி
DeleteGood.Thoughtful lines.
ReplyDeleteThanks Dan annan
DeleteNice Lines. Poem super Jesman. Congratulations da.
ReplyDeleteVery kind words. Thank U
Deleteசிறப்பான கவிதை. மருத்துவர்களை தலைவணங்குகிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சி
DeleteHappy doctor's day super anna
ReplyDeleteThanks Prashanthini
DeleteNalla irruku sir
ReplyDeleteThank U
Deleteஅறப்பணி ஆற்றும்
ReplyDeleteஅர்ப்பணிப்பு மிக்க
மருத்துவர்களுக்கு.. இனிய வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு.. உங்கள் பயணம் நெடு தூரம் பயணிக்க வாழ்த்துக்கள் மாப்ள..
வணக்கம் மாப்ள. . . லண்டன்ல இருந்து நற்றமிழ் பேசுற . . .
Delete"We have the ability and if, with faith in our future, we exert ourselves with determination, nothing, I am sure, no obstacles, however formidable or insurmountable they may appear at present, can stop our progress... (if we) all work unitedly, keeping our vision clear and with a firm grasp of our problems. " - Bidhan Chandra Roy
ReplyDeleteDoctor quote. Quotable quote. I thank you so much for your support Anna
DeletePowerful Lines for Powerful People. Proud of You Sir
ReplyDeleteSo kind of you. Thank you for your kind words. Thanks for your support once again.
Delete