ஃபாஸ்ட் ஃபுட் நல்லதல்ல

நான் (பவுல்) நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், 
தேவனே விளையச்செய்தார். 
1 கொரி. 3:6

நாம் செய்யும் நற்செயல்களுக்கான பலன் 
உடனடியாக கிடையாமல் இருக்கலாம்; 
காலம் செல்லலாம்; தாமதம் ஆகலாம். 
அதற்காக சோர்ந்துபோய் நமது நற்செயல்களை நிறுத்திவிடாமல், 
இடையிலே விட்டுவிடாமல், தொடந்து செய்வோம்.

ஒருமனிதனை நல்வழிப்படுத்தும் முயற்சியில் 
தொடர்தோல்விகளே வரலாம். 
விதைப்பது நமது வேலை எனில் தொடர்ந்து விதைப்போம்; 
நீரூற்றுவது, களை எடுப்பது தானாக நடைபெறும். 
விதைப்பிற்கான அமோக விளைச்சலும், 
ஆனந்த அறுவடையும் ஆண்டவருடையது.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED